நீங்கள் வெளிநாட்டில் வாழும் தமிழரா...? வெளிநாட்டில் எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், தமிழ் படிக்கும் ஆர்வம் உள்ளவரா...? எப்பொழுது பார்த்தாலும் தமிழ் இணையத்தளங்களில் கண் பதிப்பவரா...? தமிழ் புத்தகங்கள் படிக்க ஆர்வம் உள்ளவரா? ஆனால் எப்படி வாங்குவது? எங்கு வாங்குவது என்று யோசனை உள்ளதா....? உங்களுக்கோர் நற்செய்தி.
சென்னைஷாப்பிங்கு.காமில் தமிழ் புத்தகம் எளிய முறையில் வாங்கலாம். உலகத்தில் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம். உங்களுக்கு நாங்கள் அனுப்பிவைக்கிறோம். உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும்.
அடடே... சூப்பார்....!
செம காமெடி. சாதாரண காதல் கதை. நையாண்டி, காதல், துரோகம், நட்பு, டிவிஸ்ட், பஞ்ச் டைலாக் எல்லாத்தையும் கலந்த, ஒரு நல்ல கதையுடைய திரைப்படம்.
நம்ம வீட்டுல சொல்வாங்க "வெளில, பசங்கலோட பார்த்து பழகுங்கப்பா...". அது உண்மைதான். அதனையே மையக்கருவாக வைத்து படம் தயாரித்தது சூப்பர். புதிய இயக்குனருக்கும், சசிக்குமாருக்கும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

டீசல் விலை உயர்வு. பெட்ரோல் விலை உயர்வு. மதுபானங்கள் விலை உயர்வு. எல்லாவற்றையும் உயர்த்தினால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனையின் ஆரம்பத்தை சரி செய்தால்தானே இந்தியாவிற்கு ஒரு வழி பிறக்கும்...! இன்னும் என்னனெவெல்லாம் உயரப்போகிறதோ....
கூடங்குளத்தில் கலவரம். தடியடி. கண்ணீர் குண்டு வீச்சு. :(
இந்திய அரசு / மாநில அரசுகளுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு கிடைக்கும் பரிசு. இந்திய அரசு / மாநில அரசு இவ்வாறு செய்தது கண்டிக்கத்தக்கது. இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எந்த ஒரு அரசியல்வாதியும் மக்கள் நலன் கருதி செயல்பட போவதில்லை.
ஓட்டுப் போட்ட மக்களை காக்க வைப்பது இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு வேலையா போச்சு. அவர்கள் செல்லும் வரை டிராபிக் ஜாம். எதோ நல்லது செய்ய போனா பரவாயில்லை. ஆனால் அவனவன் பாக்கெட்ட ரொப்பிக்க தானே போரான். அதுக்கு, மக்கள் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக வழிவிடும்படி செய்கிறது அவர்களுடைய பதவி.
கேட்ட பாதுகாப்புனு... சொல்ல வேண்டியது. அப்படி பயப்படுகிறவன் ஏன் அரசியலுக்கு வரனும் .....?
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு யாரை கூப்பிடுவது என்பதே விவஸ்த்தை இல்லை. பல வருடங்களாக நடக்கும் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை போய் அழைப்பது சரியா?
படத்தின் ஆரம்பத்தில் ஒரு நல்ல வசனம் உள்ளது.
லீ(ஜீவா): தாத்தா, நான் புரூஸ் லீ மாதிரி ஆகனும்னு....
தாத்தா: புரூஸ் லீ க்கு வந்து நான் இவங்கள மாதிரி ஆகனும்னு இல்ல அவங்கள மாதிரி ஆகனும்னு ஆசையெல்லாம் கிடையாது. அவரு என்னவா ஆகனும்னு அவரு சிந்திச்சி செய்ல்பட்டார். அவர் லெஜண்ட் ஆனார். நீ என்ன ஆகனும்னு யோசி....
இந்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. மற்றபடி, அந்த படத்தில் பாடல்கள் நல்லா இருக்கு. மிஸ்கின்னின் படங்களில் வழக்கம் போல் வரும் பாடல்கள் மாதிரி இதிலும் பாடல்கள். மதுபான கடையில் வரும் பாடல் வரிகள் அருமை. பல நல்ல கருத்துக்கள் அடங்கியவை.
தமிழ் புத்தகங்களை இனையதளம் மூலம் கிடைப்பது புதிதல்ல. எனினும், அத்தகைய சேவையை நாங்கள் தொடங்கினோம். நிறைய பேர் விற்பதில்லை என்பதனை அறிந்தோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பற்றி பின்பு அலசலாம்.
எமது வலைதளத்தை பற்றி சில குறிப்புகள்
சங்கம் வைத்து தமிழை ஒரு காலத்தில் வளர்த்தோம். இப்போழுது, பேஸ்புக்கில் சங்கம் வைத்து தமிழை வளர்க்கின்றோம். தமிழர்களாகிய நீங்கள் ‘லைக்’ செய்து பயனடைவீர்களாக.
நம்முடைய மனது என்னவெல்லாம் சிந்திக்கிறது என்று பார்த்தால் சில சமயம் சிரிப்பு தான் வருகிறது. சில சமயம் ச்செனு கூட தோனும்.
அப்படிதான் என் மனதில் ஓடுகின்ற கேள்விகளை இங்கே பதிய விரும்புகிறேன்....
1. ஏன் ஒருவர் வாழவேண்டும்?
2. நாம் யார்? எதற்கு இந்த உலகம்?
3. யாரை நோக்கிச் செல்கிறோம்....? எதை நோக்கிச் செல்கிறோம்?
4. மகிழ்ச்சி என்பதின் பொருள் யாது? இன்பம் துன்பம் வெறும் மனிதனின் வெளிப்பாடுகள் என்றால் இன்பம் அடையும் பொழுது ஏன் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கிறது? துன்பம் வரும் நேரத்தில் "இதெல்லாம் ஒரு வாழ்க்கையா" என்றல்லவா தோன்றுகிறது....
நான் தற்பொழுது எனது சொந்த நிறுவணத்தில் பணிபுரிகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எமது சென்னைஷாப்பிங்கு.காம் இணையத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சுவரஸ்யமான நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...
சில நாட்கள் முன்பு, எனது கைபேசிக்கு ஒரு அழைப்பிதழ் வந்தது.
செல்வி: மகாபலிபுரத்திலிருந்து நான் பேசுகிறேன். எனக்கு எதேனும் ஒரு தமிழ் இலக்கணம் புத்தகம் வேண்டும். உங்களது இணையத்தினை பார்த்தேன். புத்தகம் உள்ளதா
பாலா: இல்லை. எந்த மாதிரி?
Recent comments
19 weeks 4 days ago
21 weeks 4 days ago
23 weeks 3 days ago
28 weeks 4 days ago
36 weeks 3 days ago
36 weeks 3 days ago
40 weeks 4 days ago
1 year 9 weeks ago
1 year 18 weeks ago
1 year 20 weeks ago