கேளுங்க! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க! - சூரியன் FM
இது செம ஹாட்டு மச்சி - ரேடியோ மிர்ச்சி
நீங்கள் எங்கு சென்றாலும் நாங்கள் பின்தொடர்வோம் - ஹட்சு (வேடாபோன்)
என்னடா இவன் விளம்பரங்களில் வரும் வாக்கியகளை இங்கு எழுதியுள்ளான் என்று நினைத்தீர்களா? ஒன்னுமில்லை. எல்லாம் ஒரு விடயமாதான். செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். வானொலியில் விளம்பரங்களை கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட விளம்பரங்கள் எவ்வாறு உருவாகிறது. எப்படி உருவானது. அதில் இருக்கும் வேலைவாய்ப்புகள், புகழ் போன்றவை என்னென்ன என்று தெரிய வேண்டுமா? படியுங்கள் யுவகிருஷ்ணாவின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்.

| ஆசிரியர் | யுவகிருஷ்ணா (லுக்கிலுக்) |
| பக்கங்கள் | 152 |
| விலை | ரூ. 70/- |
| வெளியீடு | கிழக்கு பதிப்பகம் |
இது கூட ஒரு விளம்பரம் தான் :). என்ன லக்கி சரியா?
இன்று தான் படித்து முடித்தேன். எனது வாழ்க்கையில் பாடப்புத்தகங்களை தவிர ஒரு புத்தகம் படித்தென் என்ற பெருமையை ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்” பெற்றுள்ளது. லக்கி நன்றாக எழுதியிருக்கிறார். நடைகள் எளிமையாக உள்ளது. நிறைய தகவல்களை கொடுத்திருக்கிறார். நிறைய எடுத்துக்காட்டுகளை குறிப்பிட்டிருக்கிறார். இப்பொழுதெல்லாம் எதாவது ஒரு விளம்பரம் வந்தால் அதனை உந்து கவனித்து வருகிறேன். ஏற்கனவே விளம்பர துறையில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஆனால் சரியான வழிகாட்டுதல் அங்கு இல்லை. அதனலவோ என்னவோ நான் ஐ.டி துறைக்கு வந்து விட்டேன். சரி புத்தகத்தை பற்றி பேசுவோம்.
நிறைகள்:
குறைகள்:
இன்னும் எவ்வாறு சிறப்பாக செய்திருக்கலாம்:
அதிகபடியான தகவல்களுடன் புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று என்னுகிறேன். சில பல விளம்பர யுத்திகளை நான் அறிந்தேன் என்பது நிச்சயம். அதனை நிச்சயம் பயன்படுத்துவேன். அதற்காக லக்கிக்கு இப்பவே நன்றி சொல்கிறேன். யுவகிருஷ்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள். புத்தகத்தினை வாங்க இங்கே செல்லவும்
Comments
All in the Game..
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா..
Post new comment