ஒரு தாய், அவளது குழந்தைகள்...

நான் தற்பொழுது எனது சொந்த நிறுவணத்தில் பணிபுரிகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எமது சென்னைஷாப்பிங்கு.காம் இணையத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சுவரஸ்யமான நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...

சில நாட்கள் முன்பு, எனது கைபேசிக்கு ஒரு அழைப்பிதழ் வந்தது.
செல்வி: மகாபலிபுரத்திலிருந்து நான் பேசுகிறேன். எனக்கு எதேனும் ஒரு தமிழ் இலக்கணம் புத்தகம் வேண்டும். உங்களது இணையத்தினை பார்த்தேன். புத்தகம் உள்ளதா

பாலா: இல்லை. எந்த மாதிரி?
செல்வி: பள்ளியில் 10ஆவது படிக்கும் எனது குழந்தைக்காக... ஆங்கிலத்தில் இருக்கும் ரென் அண்டு மார்ட்டின் மாதிரி....
பாலா: பள்ளி பாடபுத்தகங்கள் இன்னும் நாங்கள் விற்க வில்லை மேடம். இனிமேல் தான்..
மேலும், நீங்கள் கேட்டவற்றை எங்களது பதிப்பாளரிடம் கேட்டு சொல்கிறோம்.
செல்வி: சரி.

நான் டிவிட்டர் மற்றும் இணையத்தில் தேடினேன். ஒன்றும் கிடைக்க வில்லை. பதிப்பாளரிடம் கேட்டு மறுநாள் அவர்களை அழைத்தேன்.
பாலா: மேடம், "எளிய தமிழ் இலக்கணம்" என்று ஒரு சிறிய புத்தகம் உள்ளது. வேண்டுமா..? உங்களது தேவையை பூர்த்தி செய்யுமா என்பது எனக்கு தெரியாது...
செல்வி: பரவா இல்லீங்க சார். நான் வாங்கிக்கொள்கிறேன். எப்படி வாங்குவது...?
பாலா: வி.பி.பி மூலம் அனுப்பிடவா..? ஆனால் ஒரு வாரம் ஆகும்....
செல்வி: வேண்டாம் சார். உடணே வேண்டும். நானே வந்து வாங்கிக்கொள்கிற்ஏன்.
பாலா: உங்களிடம் நெட்பேங்கிங் உள்ளதா......?
செல்வி: இல்லை.
பாலா: ஐ.சி.ஐ.சி.ஐ அல்லது கனரா வங்கி எதேனும் பக்கத்தில் உள்ளதா?
செல்வி: இல்லை.
பாலா: சரி மேடம். நீங்க வந்து வாங்கிக்கோங்க... புத்தகம் பறிமுதல் பன்ன உடனேயே கால் பன்றேந்.
செல்வி: சரிங்க.

புத்தகத்தினை பதிப்பாளரிடமிருந்து வாங்கி பேக்கிங் செய்து பின்பு கால் செய்தேன்...
பாலா: மேடம்! புக் ரெடியா இருக்கு. எப்ப வந்து எடுத்துக்குறிங்க..
செல்வி: இன்றே வருகிறேன்...

சில மணி கழித்து அன்று மாலை 3க்கு கால் செய்தாங்க. அடையார் பேருந்து நிலைத்தில் வந்திருப்பதாக. பின்னர், நானும் பேக் செய்த புக்கை எடுத்துக்கொண்டு சென்றேன்.
ஒரு அதிர்ச்சி. செல்வி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் (கைக்குழந்தை ஒன்று, 5-10 வயது இருப்பவள் ஒன்று). செல்போனில் பேசி அவரை கண்டுக்கொண்ட பிறகு சென்று புத்தகத்தினை கொடுத்துவிட்டேன். செல்வியும், இரு குழந்தைகளும் என்னை பார்த்து சிரித்தன...

பாலா: ஏங்க, இவ்வளவு தூரம், குழந்தைங்கள கூட்டிக்கிட்டு...
செல்வி: பசங்க படிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். என்னோட பெரிய பொன்னுக்குதான் இந்த புக். சாதாரண தமிழ் இலக்கணம் புக் எல்லாம் கஷ்டமா இருக்கு. பள்ளி பாடத்தில் வரும் இலக்கணமும் கடினமாக அவளுக்கு இருக்கு... சரிங்க... ரொம்ப டேங்க்ஸ்.

சில விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தது...

  • ஆங்கிலத்தில் இருக்கும் ரென் அண்டு மார்ட்டின் கிராமர் புக் மாதிரி தமிழ்ல இல்லையா?இன்னும் தமிழ் இலக்கணம் கஷ்டமாக உள்ளதே...!
  • நெட்பேங்கிங் இல்லதாவர்க்கு? எமது வங்கிகள் வாடிக்கையாளரின் ஊரில் இல்லையெனில்?

வி.பி.பி என்பது தான் ஒரே கதியா.... தனியார் நிருவண தூதஞ்சல் உள்ளன. ஆனால் அதிக கட்டணம்.

இந்தியா போஸ்ட் நல்லா தான் இருக்கு பயன் படுத்த. ஆனால் ஆமை போல் உள்ளது. ஒரு பைய அங்க வேலை செய்ய மாட்டானுங்க... எந்த கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது.

எப்படி எமது இணையத்தில் இன்னும் பல சேவைகளை அறிமுகப் படுத்துவது, என்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். இனி அதனை நடத்தும் நடைமுறை சிக்கல்கள் பற்றி நிறைய எழுதுவேன்.

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

தமிழ் புத்தக விற்பனை இணையதளம்