நம்முடைய மனது என்னவெல்லாம் சிந்திக்கிறது என்று பார்த்தால் சில சமயம் சிரிப்பு தான் வருகிறது. சில சமயம் ச்செனு கூட தோனும்.
அப்படிதான் என் மனதில் ஓடுகின்ற கேள்விகளை இங்கே பதிய விரும்புகிறேன்....
1. ஏன் ஒருவர் வாழவேண்டும்?
2. நாம் யார்? எதற்கு இந்த உலகம்?
3. யாரை நோக்கிச் செல்கிறோம்....? எதை நோக்கிச் செல்கிறோம்?
4. மகிழ்ச்சி என்பதின் பொருள் யாது? இன்பம் துன்பம் வெறும் மனிதனின் வெளிப்பாடுகள் என்றால் இன்பம் அடையும் பொழுது ஏன் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கிறது? துன்பம் வரும் நேரத்தில் "இதெல்லாம் ஒரு வாழ்க்கையா" என்றல்லவா தோன்றுகிறது....
5. சமுதாயம், உறவினர்கள், குடும்பம், வேலை, கவுரவம், மறியாதை, அந்தஸ்து - இவையென்றால் என்ன?
6. எதற்கு கல்யாணம்? எதற்கு குழந்தை குட்டினு..... எதற்கு இந்த பதிவு....?
சில கேள்விகளுக்கு பதில் தேடாமலேயே இருக்க வேண்டும். தேட நினைத்தால் இருக்கின்ற நேரம் வீணாகி கிடைக்க வேண்டியவற்றை இழந்து தவிப்போம். கேள்விகள் எழலாம். கேள்விகள் ஒன்று இருந்தால் பதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல்... அது கேள்வியாக இருத்தல் இயலாது. வெறும் வெட்டி பேச்சு....
மீண்டும் சந்திப்போம்.... இன்றிலிருந்தது இங்கே பல பதிவுகளை நான் பதிய விரும்புகிறேன். ஏன் என்று தெரியவில்லை. மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் தேடாமல் இருப்பதற்க்காக கூட இருக்கலாம்.....
Comments
Post new comment